/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பேண்ட் இசை போட்டி; மாணவ, மாணவிகள் அசத்தல்
/
பேண்ட் இசை போட்டி; மாணவ, மாணவிகள் அசத்தல்
ADDED : செப் 18, 2025 08:49 PM

குன்னுார்; குன்னுாரில் நடந்த பேண்ட் இசை போட்டியில், பள்ளி மாணவ, மாணவிகள் அசத்தினர்.
குனனுார் ஜோசப் மேல்நிலை பள்ளியில், மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ மையம் சார்பில் பேண்ட் ஷோ மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேண்ட் இசை போட்டி நடந்தது. ராணுவ வீரர்களின் தேசப்பற்று பாடல்கள், திரைப்பட பாடல்கள், இசை குழுவினரால் இசைக்கப்பட்டது. அதன் பின் நடந்த போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர் அணி வகுப்புகளில் பங்கேற்றனர். நடுவராக எம்.ஆர்.சி., பேண்ட் மாஸ்டர் சுபேதார் ரவி பங்கேற்றார்.
அதில், சிறப்பாக பேண்ட் இசைத்த, கோவை செயின்ட் பிரான்சிஸ் கான்வென்ட், குன்னுார் ஜோசப் கான்வென்ட், செயின்ட் ஜோசப் கல்லுாரி முதல், 3 இடங்களை பிடித்தன. முதல் பரிசாக, 10 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரிசாக, 7000 ரூபாய்; மூன்றாவது பரிசாக, 5,000 ரூபாய் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.