/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ராணுவ இசை குழுவினரின் 'பேண்ட் ஷோ'
/
ராணுவ இசை குழுவினரின் 'பேண்ட் ஷோ'
ADDED : அக் 21, 2024 04:34 AM

குன்னுார், : ராணுவ வீரர்களின் துணிச்சல் மற்றும் இசை திறமைகளை போற்றி கவுரவிக்கும் வகையில், குன்னுாரில் பேண்ட் இசை நிகழ்ச்சி போட்டிகள் நடத்தப்பட்டது.
குன்னுார் புனித ஜோசப் மேல்நிலை பள்ளியில், ஜோசப் கல்லுாரி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், 'கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை இணைப்பது' என்ற தலைப்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதில், மாணவர்கள் மத்தியில் பேண்ட் இசை கருவிகள் வாசித்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ராணுவ வீரர்களை கவுரவிக்கவும் ராணுவ பேண்ட் இசை நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் நடந்தது.
அப்போது, மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் பேண்ட் இசைக்குழுவினரின் பேண்ட் ஷோ அனைவரையும் கவர்ந்தது. அதில், ராணுவ வீரர்கள் கம்பீரமான நடையுடன் தேசபக்தி பாடல்களை இசை கருவிகளில் இசைத்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
வீரர்கள், 'டிரம்பட், கிளாரினெட் , டிரம்ஸ், கீ போர்டு' உள்ளிட்ட இசை கருவிகளை வாசித்து, அணிவகுப்பில் பங்கேற்றனர். பின், பள்ளிகளுக்கு இடையே, பேண்ட் இசை அணிவகுப்பு மற்றும் போட்டிகள் நடந்தது. போட்டிக்கு நடுவராக குன்னுார் ராணுவ மையத்தின் பேண்ட் மாஸ்டர் நாயக் ரவி பங்கேற்றார்.