/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் 23ல் மாவட்ட அளவில் வங்கி கடன் வழிகாட்டுதல் முகாம்
/
ஊட்டியில் 23ல் மாவட்ட அளவில் வங்கி கடன் வழிகாட்டுதல் முகாம்
ஊட்டியில் 23ல் மாவட்ட அளவில் வங்கி கடன் வழிகாட்டுதல் முகாம்
ஊட்டியில் 23ல் மாவட்ட அளவில் வங்கி கடன் வழிகாட்டுதல் முகாம்
ADDED : பிப் 22, 2024 06:28 AM
ஊட்டி: ஊட்டியில் மாவட்ட அளவிலான வங்கி கடன் வழிகாட்டுதல் முகாம், 23ல் நடக்கிறது.
கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், அரசு மானியத்துடன் கூடிய, சுய தொழில் கடன் திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மற்றும் பிற அரசு துறை மூலமாக, செயல்படுத்தி வருகிறது.
இதன்மூலம், புதிதாக வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்க, வங்கிகள் மூலம், கடன் வசதி ஏற்படுத்தி தரப்படுகிறது. அதன்படி, மாவட்ட அளவிலான வங்கி கடன் வழிகாட்டுதல் முகாம், ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள தோட்டக்கலை அரங்கத்தில், 23ம் தேதி, காலை, 10:00 மணிமுதல் நடக்கிறது.
முகாமில், அரசு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களின் கீழ், விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வங்கிகள் மூலம், மானியத்துடன் கூடிய கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதில், தேயிலை துாள், சாக்லேட், வர்க்கி தயாரித்தல், கேரட் கழுவும் இயந்திரம், கான்கிரீட் கலவை இயந்திரம், பொறியியல் இயந்திரங்கள், ஆட்டோ மொபைல் பணிமனை, வீல் அலைன்மென்ட் மையம் அமைப்பது, வாடகை வாகனங்கள் மளிகை கடை, பெட்டிக்கடை மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட தொழில்கள் துவங்கலாம்.
முகாமில், சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் கடன் திட்டங்கள் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான திட்டங்கள் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட உள்ளது.
கூடுதல் விபரங்கள் தேவைப்படுவோர், 0423 - 2443947; 89255 33996; 89255 33997 என்ற எண்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.