/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியினரை சீரழிக்கும் 'பார் ' கூடுதல் விலைக்கு மது விற்பதாக புகார்
/
பழங்குடியினரை சீரழிக்கும் 'பார் ' கூடுதல் விலைக்கு மது விற்பதாக புகார்
பழங்குடியினரை சீரழிக்கும் 'பார் ' கூடுதல் விலைக்கு மது விற்பதாக புகார்
பழங்குடியினரை சீரழிக்கும் 'பார் ' கூடுதல் விலைக்கு மது விற்பதாக புகார்
ADDED : மே 12, 2025 10:44 PM
பந்தலுார், ; 'பந்தலுார் பஜார் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடை 'பார்' பழங்குடியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது,' என, புகார் எழுந்துள்ளது.
பந்தலுார் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனு:
பந்தலுார் பஜார் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை 'பார்' செயல்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் இங்கு, விதிகளை மீறி மது விற்பனை செய்யப்படும் நிலையில், பழங்குடியின மக்கள் காலை, 6:00 மணிக்கு இங்கு வந்து கூடுதல் விலை கொடுத்து, மது வாங்கி அருந்துவதால் அவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது.
அத்துடன் நள்ளிரவு நேரங்களில் இங்கு மது அருந்தும், நபர்கள் இதன் அருகே உள்ள மாரியம்மன் மற்றும் முருகன் கோவில் வளாகங்களில் காலி மது பாட்டில்களை போட்டு செல்வதுடன், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
இங்கு டாஸ்மாக் மதுக்கடையை விட, இரண்டு மடங்கு கூடுதல் விலைக்கு சரக்கு விற்பனை செய்யப்படும் நிலையில், டாஸ்மாக் விடுமுறை நாட்களில் தாராளமாக மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் கண்டுகொள்ளாத நிலையில், பழங்குடியின மக்கள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருவதால், இதனை இங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.