ADDED : ஜன 14, 2024 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி;வடலுார் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, வரும், 25ல் மதுக்கடைகள் இயங்காது.
கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கை:
நீலகிரியில், செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், கிளப் பார்கள், ஓட்டல் பார்கள், வரும், 25ல் வடலுார் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, மூடப்பட்டு, மது விற்பனை இருக்காது. உத்தரவை மீறி மது விற்பனை செய்பவர்கள் மீது, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பிட்ட நாளில் டாஸ்மாக் கடைகள், பார்கள் திறந்திருப்பதாக தகவல் தெரியும் பட்சத்தில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர், குன்னுார், - 0423-2234211மற்றும் ஏ.டி.எஸ்.பி., ஊட்டி, 0423- 2223802 என்ற தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.