/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பூங்காவில் பேட்டரி கார் இயக்கம்: வயதான சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
/
பூங்காவில் பேட்டரி கார் இயக்கம்: வயதான சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
பூங்காவில் பேட்டரி கார் இயக்கம்: வயதான சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
பூங்காவில் பேட்டரி கார் இயக்கம்: வயதான சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ADDED : மார் 19, 2024 10:32 PM

ஊட்டி;ஊட்டி தாவரவியல் பூங்காவில், பேட்டரி கார் இயக்கப்படுவதால், வயதான சுற்றுலா பயணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு, ஆண்டுதோறும் தோறும், 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். நடப்பாண்டு மே மாதம் கோடை விழா துவங்க உள்ள நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில், ஆறு நாட்கள் மலர் கண்காட்சி நடக்கிறது.
இந்நிலையில், முதல் முறையாக தாவரவியல் பூங்கா முழுவதையும் சுற்றி பார்க்க ஏதுவாக, பேட்டரி கார்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வரும் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் அனுகூலமாக உள்ளதால், மகிழ்ச்சியுடன் பூங்கா அழகை ரசித்து செல்கின்றனர்.
பூங்கா நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், 'பூங்காவினுள் முதல் முறையாக இயக்கப்படும் பேட்டரி கார், வயதான மற்றும் மாற்றுத்திறனாளி சுற்றுலா பயணிகளுக்கு ஏற்றதாக உள்ளது. ஒருமுறை, பூங்காவை சுற்றிவர ஒரு நபருக்கு, 30 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எட்டு பேர் பயணிக்கலாம்.
சுற்றுலா பயணிகள் மத்தியில் பேட்டரி கார் இயக்கம் வரவேற்பு பெற்றுள்ளது,' என்றனர்.