/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கரடியை தொடர்ந்து சிறுத்தையும் 'விசிட்' : 'உபாசியில்' வசிக்கும் மக்கள் அச்சம்
/
கரடியை தொடர்ந்து சிறுத்தையும் 'விசிட்' : 'உபாசியில்' வசிக்கும் மக்கள் அச்சம்
கரடியை தொடர்ந்து சிறுத்தையும் 'விசிட்' : 'உபாசியில்' வசிக்கும் மக்கள் அச்சம்
கரடியை தொடர்ந்து சிறுத்தையும் 'விசிட்' : 'உபாசியில்' வசிக்கும் மக்கள் அச்சம்
ADDED : நவ 21, 2025 05:33 AM

குன்னுார்: குன்னுார் 'உபாசி' வளாகத்திற்குள் கரடி தொடர் விசிட் செய்து வரும் நிலையில், சிறுத்தையும் வர துவங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
குன்னுார் நகர பகுதியில் தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க அலுவலகம் (உபாசி) உள்ளது. தேயிலை, காபி, ரப்பர், ஏலக்காய் மற்றும் மிளகு உற்பத்தியாளர்களின் சங்கம் உள்ளன. இங்கு பொருளாதார ஆராய்ச்சி, சந்தை படுத்துதல், அறிவியல் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
ஆண்டிற்கு ஒரு முறை தென் மாநில தோட்ட அதிபர்கள் சங்க மாநாடு நடத்தப்படுகிறது. இங்கு பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களின், 40 குடும்பங்கள் உள்ளன.
கடந்த, 4 மாதங்களில் இரவு நேரங்களில், 13 முறை வளாகத்திற்குள் கரடி வந்துள்ளது. உபாசி வேளாண் ஆராய்ச்சி மைய ஆலோசனை அலுவலர் வீட்டில் இருக்கும் போதே, வீட்டின் கதவை உடைத்தது. அவர் சப்தம் எழுப்பியதால் ஓட்டம் பிடித்துள்ளது. கரடியை பிடிக்க வனத்துறை கூண்டு வைத்த போதும் சிக்கவில்லை.
இந்நிலையில், நேற்று அதிகாலை, 1:20 மணியளவில் சிறுத்தை வளாகத்திற்குள் உலா வந்தது அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவானது. இதனால்,அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வர முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.
உபாசி அதிகாரிகள் கூறுகையில்,'வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டெருமை, முள்ளம்பன்றி மட்டுமே வந்து சென்ற நிலையில் தற்போது கரடி, சிறுத்தை உலா வருகின்றன.
சிறுத்தை வருவதால், பணி முடித்து நள்ளிரவில் செல்வோர் அச்சத்தில் உள்ளனர். அசம்பாவிதங்கள் நடக்கும் முன், கூண்டு வைத்து கரடி, சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும்,' என்றனர்.

