/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரி அருகே கிணற்றில் விழுந்த கரடி பலி
/
கோத்தகிரி அருகே கிணற்றில் விழுந்த கரடி பலி
ADDED : ஜன 24, 2025 09:45 PM
கோத்தகிரி, ; கோத்தகிரி அருகே கிணற்றில் விழுந்த கரடி பலியானது.
கோத்தகிரி ஜக்கனாரை ஊராட்சிக்கு உட்பட்ட அரவேனு பகுதியில், ஊராட்சிக்கு சொந்தமான கிணறு உள்ளது. மக்கள் பயன்படுத்தி வரும் இந்த கிணற்றில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு,  மூன்று கரடிகள் விழுந்து, தண்ணீரில் தத்தளித்தன.
தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று ஏணி வைத்து, இரண்டு கரடிகளை காப்பாற்றினர். இந்நிலையில், நேற்று முன்தினம் அதே கிணற்றில் மற்றொரு கரடி இறந்து கிடந்துள்ளது. அந்த வழியாக சென்றவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், இறந்த கரடியின் உடலை கிணற்றில் இருந்து வெளியே எடுத்து, பிரேத பரிசோதனைக்கு பின் அதே இடத்தில் எரியூட்டினர்.

