/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்ட நுாலகத்தில் நுழைந்த கரடி; கண்காணிப்பு கேமரா பதிவால் அச்சம்
/
மாவட்ட நுாலகத்தில் நுழைந்த கரடி; கண்காணிப்பு கேமரா பதிவால் அச்சம்
மாவட்ட நுாலகத்தில் நுழைந்த கரடி; கண்காணிப்பு கேமரா பதிவால் அச்சம்
மாவட்ட நுாலகத்தில் நுழைந்த கரடி; கண்காணிப்பு கேமரா பதிவால் அச்சம்
ADDED : ஜூன் 25, 2025 10:03 PM
ஊட்டி; ஊட்டி பொது நுாலக கட்டடத்தில் நுழைந்த கரடியால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
ஊட்டி ஐயப்பன் கோவில் அருகே மாவட்ட மைய நுாலகம் செயல்படுகிறது. நுாலகத்தை ஒட்டி, சுகாதார துறை துணை இயக்குனர் அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தை சுற்றி கற்பூர மரங்கள், புதர் சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், சுகாதாரத்துறை அலுவலக புதரிலிருந்து வெளியேறிய கரடி, பொது நுாலக கட்டடத்திற்குள் புகுந்து சுற்றித்திரிந்தது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'சுகாதாரத்துறை அலுவலகம் ,பொது நூலகத்தின் பின்பகுதிகளில் அதிகளவில் புதர் சூழ்ந்து காணப்படுவதால் கரடி தொல்லை உள்ளது. பணி முடிந்து இரவு நேரங்களில் வீடுகளுக்கு அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
கரடி நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சுற்றி திரியும் கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விடுவிக்க வேண்டும்,' என்றனர்.