/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பள்ளி வகுப்பறையை இரவில் சுறையாடிய கரடி; அதிர்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள்

ADDED : நவ 28, 2024 11:50 PM

மஞ்சூர்; மஞ்சூர் அருகே அரசு பள்ளியில் புகுந்த கரடி வகுப்பறைகளை சூறையாடியதால் ஆசிரியர்கள், மாணவர்கள் பீதி அடைந்துள்ளனர்.
மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பெங்கால் மட்டம் அருகே கோக்கலாட பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு இரவில் வந்த கரடி, பள்ளியின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துள்ளது. அங்கிருந்த மேஜை, அலமாரிகளில் வைக்கப்பட்டிருந்த நோட்டு புத்தகங்கள் மற்றும் பல பொருட்களை கீழே தள்ளி சூறையாடி, பீரோ, மேஜை இருக்கைகளையும் தள்ளிவிட்டு சென்றுள்ளது.
மறுநாள் காலையில் பள்ளிக்கு சென்ற ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் அலுவலகம் மற்றும் வகுப்பறைகளில் புத்தக மற்றும் பொருட்கள் சிதறி அலங்கோலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த சில தினங்களாக தொடர்ந்து இப்பள்ளியில் பலமுறை கரடி கதவுகளை உடைத்து பொருட்களை சூறையாடி வருவது ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
வனத்துறைக்கு புகார் தெரிவிக்கும் கண்டுகொள்ளாததால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, வனத்துறையினர் இப்பகுதியில் கூண்டு வைத்து பிடித்து கரடியை வனப்பகுதியில் விட நடவடிக்கை வேண்டும்.