/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரை முற்றுகையிடும் கரடிகளால் பாதிப்பு; கண்டுகொள்ளாத வனத்துறையால் மாணவர்கள் அச்சம்
/
குன்னுாரை முற்றுகையிடும் கரடிகளால் பாதிப்பு; கண்டுகொள்ளாத வனத்துறையால் மாணவர்கள் அச்சம்
குன்னுாரை முற்றுகையிடும் கரடிகளால் பாதிப்பு; கண்டுகொள்ளாத வனத்துறையால் மாணவர்கள் அச்சம்
குன்னுாரை முற்றுகையிடும் கரடிகளால் பாதிப்பு; கண்டுகொள்ளாத வனத்துறையால் மாணவர்கள் அச்சம்
ADDED : டிச 16, 2024 09:20 PM

குன்னுார்; 'குன்னுார் அரசு பள்ளிக்கு, 'விசிட்' செய்யும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடக்கை எடுக்காமல் உள்ளதால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
குன்னுார் பகுதிகளில், சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், குன்னூர் அரசு மேல் நிலைப்பள்ளி துவக்கப் பள்ளிக்கு அடிக்கடி கரடிகள் வருகின்றன. நேற்று முன்தினம்இரவு பள்ளிக்கு வந்த கரடிபுதிய சத்துணவு மையத்தின் கதவை உடைத்து உள்ளே சென்று, எண்ணெய் உட்கொண்டு, உணவு பொருட்களை சேதப்படுத்தி உள்ளது. அருகில் உள்ள மாற்று திறனாளி மையத்தின் கதவை உடைக்க முயற்சி செய்துள்ளது.
இதே போன்று, கோத்தகிரி சாலையில் உள்ள, இந்திய குடும்ப நல மருத்துவ மையம் மற்றும் தனியார் கெஸ்ட் ஹவுஸில் இரவில் புகுந்த கரடி, கதவு ஜன்னல்களை உடைத்து பொருட்களை சேதம் செய்துள்ளது.
வனத்துறையினர் ஆய்வு
இந்நிலையில், தனியார் கெஸ்ட் ஹவுஸ், குடும்ப நல சங்க மருத்துவ மையத்தில், ஆய்வு செய்த வனச்சரகர் ரவீந்திரநாத், கூண்டு வைத்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். 'இந்த தகவல்கள் 'மீடியா' உட்பட யாருக்கும் தெரிவிக்க வேண்டாம். கூண்டு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என, தெரிவித்து சென்றுள்ளார்.
மக்கள் கூறுகையில், 'அரசு பள்ளி மற்றும் கிராம பகுதிகளுக்கு வரும் கரடிகளுக்கு, கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்காத வனத்துறை, தனியார் விடுதிகள் மற்றும் பங்களாக்களில் மட்டும் கூண்டு வைக்க நடவடிக்கை எடுக்கிறது.
'அப்படியென்றால் பொது மக்களுக்கு பாதுகாப்பை யார் கொடுப்பது. குன்னுார் ஊராட்சி ஒன்றியம் சார்பில் கட்டப்பட்ட, அரசு பள்ளியில் சத்துணவு மையத்தின் தரமில்லாத கதவை எளிதாக உடைத்த கரடி, அருகில் உள்ள மாற்று திறனாளி மையத்தின் பழமையான கதவை உடைக்க முடியாமல் திரும்பி சென்றுள்ளது.
'இதனால், தரமில்லாத பணி குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு பள்ளி பகுதியில் வனத்துறை கூண்டு வைக்க வேண்டும்,' என்றனர்.