/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பீட்ரூட் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
/
பீட்ரூட் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 26, 2025 11:15 PM

குன்னூர்: குன்னுாரில் பீட்ரூட் கிலோவுக்கு, 42 ரூபாய் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், உருளைகிழங்கு, காரட், பீட்ரூட் உட்பட மலை காய்கறிகள் விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. இதில், ஊட்டி, குன்னூர், குந்தா உட்பட பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் பீட்ரூட் விளைவித்தனர். இவை, மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு கொண்டு சென்று ஏலம் விடப்படுகிறது.
நேற்று மேட்டுப்பாளையம் மண்டியில் நடந்த ஏலத்தில், அதிகபட்ச விலையாக கிலோவிற்கு, 42 ரூபாய் விலை கிடைத்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம் சில இடங்களில், மழையால் பீட்ரூட் செடிகள் பாதிக்கப்பட்டது. பீட்ரூட் அறுவடை செய்யும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

