/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பகவதி அம்மன் ஆறாட்டு மகோற்சவம் 30ல் துவக்கம்
/
பகவதி அம்மன் ஆறாட்டு மகோற்சவம் 30ல் துவக்கம்
ADDED : நவ 28, 2025 03:26 AM
பாலக்காடு: பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோற்சவம், வரும், 30ம் தேதி முதல் டிச. 10ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
கேரள மாநிலம், பாலக்காடு, பிராயிரி கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஆறாட்டு மகோற்சவம் நடக்கிறது. நடப்பாண்டு ஆறாட்டு மகோற்சவத்தை முன்னிட்டு, வரும், 30ம் தேதி நிகழ்ச்சி துவங்கி, டிச. 10ம் தேதி வரை நடக்கிறது.
வரும், 30ம் தேதி முதல் டிச., 9ம் தேதி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கோவில் வளாக கலையரங்கில் நடைபெறுகின்றன. டிச., 3ம் தேதி மாலை 7:00 மணிக்கு தந்திரி பிரஹ்மஸ்ரீ அணிமங்கலம் வாசுதேவன் நம்பூதிரியின் தலைமையில், கொடியேற்றம் நடக்கிறது.
டிச., 5ம் தேதி அம்மனுக்கு விளக்கு பூஜை நடக்கிறது. உற்சவ நாளான, 10ம் தேதி மகா கணபதி ஹோமம், அபிஷேகம், உஷ பூஜை, கலச பூஜை, அஷ்டபதி, மஞ்சள் நீராட்டு, பிரஹ்மகலசாபிஷேகம், ஐந்து யானைகளின் அணிவகுப்புடன் காழ்ச்ச சீவேலி, அன்னதானம், அம்மன் எழுந்தருளும் வைபவம், நிர்மால்லிய தரிசனம், சந்தன காப்பு, சுற்றுவிளக்கு ஏற்றுதல், தீபாராதனை நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை, கோவில் உற்சவ கமிட்டி தலைவர் அரவிந்தாக் ஷன், பொதுச்செயலாளர் ஜெயகிருஷ்ணன், பொருளாளர் பவின் ஆகியோர் செய்து வருகின்றனர்.

