/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோவில் திருவிழாவில் பக்தி பாடலுடன் பஜனை
/
கோவில் திருவிழாவில் பக்தி பாடலுடன் பஜனை
ADDED : ஜன 01, 2024 10:45 PM

ஊட்டி:குந்தை சீமை, பொறங்காடு சீமைகளில் ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நீலகிரியில் உள்ள, 'தொத நாடு, பொறங்காடு, மேற்கு நாடு, குந்தை சீமை,' உள்ளிட்ட நான்கு படுகரின மக்கள் வாழும் சீமைகளில் ஆண்டு தோறும் ஹெத்தையம்மன் திருவிழா நடக்கிறது.
கடந்த ஒரு வாரமாக கோத்தகிரிக்கு உட்பட்ட பேரகணி, ஒன்னதலை, பெத்தளா, கூக்கல் உள்ளிட பெரும்பாலான கிராமங்களில் வெகு விமரிசையாக நடந்தது.
புத்தாண்டு தினமான நேற்று, குந்தை சீமை, மேற்கு நாடு சீமைக்கு உட்பட்ட, 30க்கு மேற்பட்ட கிராமங்களில் அந்தந்த கிராமங்களில் உள்ள ஹெத்தையம்மன் கோவில்களில் சிறப்பாக நடந்தது.
முன்னதாக, ஹெத்தையம்மன் சிலை பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. பின், கோவில் முன்பு படுகர் மக்கள் கலாசார பாரம்பரிய உடையில், 'ஹெத்தெ...ஹெத்தெ' பாடலுடன், நடனம், பஜனை நிகழ்ச்சிகளை நடத்தினர். தொடர்ந்து நடந்த காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது.

