ADDED : நவ 07, 2025 08:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலூர்: பந்தலூர் அருகே பழமை வாய்ந்த, விஷ்ணு கோவிலில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதியில் பிரசித்தி பெற்ற, ஸ்ரீ மகாவிஷ்ணு கோவில் பந்தலூர் அருகே, பொன்னானி பகுதியில் அமைந்துள்ளது.
நூற்றாண்டு பழமையான இந்த கோவிலை சுற்றி சுற்று சுவர் அமைக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. தொடர்ந்து, கோவில் நிர்வாகம், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சுற்றுசுவர் கட்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். அடிக்கல் நாட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
கோவில் மேல் சாந்தி சுதீஷ் சிறப்பு பூஜைகள் செய்தார். கோவில் மேலாளர் சந்தியா தலைமை வகித்தார். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஹரிதாஸ் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவக்கப்பட்டது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்,

