/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நெலாக்கோட்டையில் ஆய்வகம் அமைக்க பூமி பூஜை
/
நெலாக்கோட்டையில் ஆய்வகம் அமைக்க பூமி பூஜை
ADDED : மார் 12, 2024 11:34 PM

பந்தலுார்:பந்தலுார் அருகே, நெலாக்கோட்டையில் ஒருங்கிணைந்த வட்டார சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
நாள்தோறும், 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்லும் நிலையில் ஆய்வகம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். தொடர்ந்து கூடலுார் ஊராட்சி ஒன்றியம் சார்பில், 15வது நிதி குழு மானியத்தில், அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன ஆய்வகம் கட்டுவதற்கு, 67.76 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தொடர்ந்து, பணி துவங்குவதற்கான பூமி பூஜை நடந்தது. கூடலுார் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா தலைமை வகித்து பணியை துவக்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் சித்ரா, மாவட்ட பிரதிநிதி ரவீந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

