ADDED : மார் 04, 2024 11:53 PM
பெ.நா.பாளையம்;பிளிச்சி ஊராட்சி கிழக்கு பகுதி ஒன்னிபாளையம் வட்டாரத்தில் நிலவிய குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகான தரைமட்ட தொட்டி மற்றும் மேல்நிலைத் தொட்டி கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், பிளிச்சி ஊராட்சி கிழக்குப்பகுதியில் உள்ள ஒன்னிபாளையம் ஏ.டி., காலனி, ஒன்னிபாளையம் புதுார், கரிச்சிபாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதையடுத்து பிளிச்சி ஊராட்சி எல்.பி.ஏ., நிதியில், 88 லட்சம் ரூபாய் செலவில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி மற்றும் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி மற்றும் அதைச் சார்ந்த பைப்லைன் வேலைக்கு பூமி பூஜை நடந்தது.
மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி ராஜன், வீரபாண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயராமன், பா.ஜ., மாவட்ட பொருளாளர் பிரபு, மன்ற உறுப்பினர்கள் கல்பனா, கோபால்சாமி, சின்னராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

