/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழா
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழா
ADDED : ஜன 16, 2026 06:12 AM
கோத்தகிரி: கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமை வகித்தார். அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பள்ளியில் பயிலும், 57 மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி பேசுகையில், ''மாநில முதல்வர் பள்ளி கல்வித்துறைக்கு முக்கியத்துவம் வழங்கி, அதிக நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, மாநில முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகிறது. மாணவர்கள், அரசின் திட்டங்களை முழுமையாக பெற்று, நன்றாக கல்வி பயின்று மேம்பட வேண்டும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், பள்ளி முன்னாள் மாணவர்கள் வீரபத்திரன் காளிதாஸ், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் சரவணகுமார் நன்றி கூறினார்.

