/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பைக்- கார் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்
/
பைக்- கார் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்
ADDED : அக் 15, 2024 10:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் : கூடலுார் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை, மார்த்தோமா நகர் அருகே கார்- பைக் மோதிய விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.
கூடலுார் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை, மாக்கமூலா அருகே, கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருபவர் ஜெனித், 28. இவர், நேற்று காலை, 10:00 மணிக்கு, பைக்கில் கூடலுார் நோக்கி வந்தார். மார்த்தோமா நகர் அருகே, எதிரே வந்த காரும், பைக் மோதி விபத்துக்குள்ளானது.
அதில், பைக்கில் பயணித்த, ஜெனித் காயங்களுடன் உயிர் தப்பினார். அவர், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கூடலுார் எஸ்.ஐ., கபில்தேவ், எஸ்.எஸ்.ஐ., லட்சுமணன் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.