/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முன்னாள் ராணுவ வீரர்களை ஒருங்கிணைக்க பைக் பேரணி
/
முன்னாள் ராணுவ வீரர்களை ஒருங்கிணைக்க பைக் பேரணி
ADDED : ஏப் 29, 2025 09:10 PM
குன்னுார்; குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் 'ரெக்கார்ட்ஸ்' பிரிவு சார்பில், முன்னாள் ராணுவ வீரர்களை ஒருங்கிணைப்பது தொடர்பாக 'இ-பைக்' பேரணி நடந்தது. பேரணியை ரெஜிமென்ட் சென்டர் கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் துவக்கி வைத்தார்.
அதிகாரி, ஜே.சி.ஓ., மற்றும் 6 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட, 5 நாள், பைக் பேரணி திருப்பூர், கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி மற்றும் கோவை வழியாக மீண்டும் வெலிங்டனை அடைந்தது.
ராணுவ குழுவினர் கூறுகையில், 'ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் ஸ்பர்ஷ் எனும் ஆவணங்கள் பதிவு, மத்திய, மாநில அரசின் உரிமைகள் மற்றும் குறைகள் நிவர்த்தி செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது,' என்றனர்.

