/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பில்லுார் அணை இரண்டாவது முறையாக நிரம்பியது; பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
/
பில்லுார் அணை இரண்டாவது முறையாக நிரம்பியது; பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
பில்லுார் அணை இரண்டாவது முறையாக நிரம்பியது; பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
பில்லுார் அணை இரண்டாவது முறையாக நிரம்பியது; பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
ADDED : ஜூன் 16, 2025 10:30 PM

மேட்டுப்பாளையம்; பில்லூர் அணைக்கு வினாடிக்கு, 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், முழு கொள்ளளவையும் எட்டி அணை நிரம்பி வழிகிறது. இதனால் பில்லூர் அணை இரண்டாவது முறையாக நிரம்பியது.
கோவை, நீலகிரி மாவட்ட எல்லையில், வனப்பகுதியில் கட்டியுள்ள பில்லூர் அணையின் நீர்மட்ட உயரம், 100 அடியாகும். அணையின் பாதுகாப்பு நலன் கருதி, 97 அடிக்கு நீர்மட்டம் உயரும் போது, பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். நேற்று முன்தினம் மாலை பில்லூர் அணையின் நீர்மட்டம், 82.25 அடியாக இருந்தது. பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சி மற்றும் கேரளாவில் கனமழை பெய்ததை அடுத்து, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி அளவில் பில்லூர் அணைக்கு வினாடிக்கு, 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.
இதனால் அணையின் நீர்மட்டம், நள்ளிரவு, 2:30 மணிக்கு முழு கொள்ளளவான, 97 அடியை எட்டி, நிரம்பி வழிந்தது. அதன் பின் அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும், அப்படியே நான்கு மதகுகள் வழியாகவும், மின்சாரம் உற்பத்தி செய்யவும் திறந்து விடப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இரண்டாவது முறை நிரம்பியது
கடந்த மாதம் 26ம் தேதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், அணை நிரம்பி வழிந்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் அணை நிரம்பி வழிந்து கொண்டே இருந்தது. இம்மாதம் 16ம் தேதி கனமழையால் பில்லூர் அணை நிரம்பி வழிகிறது. கடந்த, 23 நாட்களில் இரண்டாவது முறையாக அணை நிரம்பி வழிகிறது.