/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு
/
நீலகிரியில் 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு
ADDED : மார் 02, 2024 11:08 PM

ஊட்டி;நீலகிரியில், 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.
மாநில அளவிலான பறவைகள் கணக்கெடுப்பு பணிக்காக, நீலகிரி வன கோட்டத்தில், 11வனச்சரகங்களில், 25 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று மாலை, ஊட்டி தெற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட கேர்ன்ஹில் வனப்பகுதியில், கணக்கெடுப்பு பணி துவங்கியது.
ஊட்டி அரசு கலைக்கல்லூரி மற்றும் மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மாணவர்கள் இப்பணியில் தன்னார்வலர்களாக பங்கேற்றுள்ளனர். இதில், நீலகிரி பிளைகேட்ஸ் உட்பட, அனைத்து பறவைகளின் கணக்கெடுப்பு நடந்தது. மேலும், பறவைகளின் இடம் பெயர்வு உள்ளிட்ட அம்சங்கள் சேகரிக்கப்பட்டன. இரண்டாவது கட்டமாக இன்று 3 ம் தேதி கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
இப்பணி நிறைவடைந்த பின், மாநில வனத்துறை மூலம், ஒரே நாளில் முழுமையான தகவல் வெளியிடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், ஊட்டி தெற்கு வனச்சரகர் கிருஷ்ணகுமார் முன்னிலையில், கீழ் கோத்தகிரி, கோரகுந்தா உள்ளிட்ட வனச்சரகர்கள் உட்பட வனத்துறையினர், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

