sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பிஷல மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

/

பிஷல மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

பிஷல மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

பிஷல மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்


ADDED : மார் 16, 2025 11:47 PM

Google News

ADDED : மார் 16, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரி பில்லிக்கம்பை அருள்மிகு ஸ்ரீ பிஷல மாரியம்மன் திரு விழா நேற்று கோலாகலமாக நடந்தது.

விழாவில், 15ம் தேதி பகல், 12:00 மணிக்கு, கட்டைகுள்ளு பகுதியில் இருந்து, அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 3:00 மணிக்கு, பில்லிகம்பை ஊரில் இருந்து, அம்மன் வனக்கோவில் புறப்பாடு நடந்தது.

முக்கிய திருவிழா நாளான நேற்று காலை, 9:00 மணி முதல், 12:00 மணி வரை, அரக்கோல் இசை முழங்க, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல், 12:00 மணி முதல், 1:00 மணி வரை, கங்கை பூஜையுடன், முடிகாணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து மாலை, 3:00 மணி வரை, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

இரவு, 8:30 மணிக்கு, ஸ்ரீ பாரதமாதா பஜனை சபா குழுவினரின், 'கார சென்னே' என்னும் படுகு சமுதாய நாடகம் நடந்தது. விழாவில், பில்லிக்கம்பை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று காலை, 8:30 மணி முதல், 11:30 மணி வரை,'கக்கே ரய்யா' கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. பகல், 12:00 மணிக்கு, அரக்கோல் ஆட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஊர் தலைவர் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us