/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடியிருப்பு அருகே முகாமிடும் காட்டெருமை
/
குடியிருப்பு அருகே முகாமிடும் காட்டெருமை
ADDED : மார் 15, 2024 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்:குன்னுார் அருவங்காடு அருகே, 10 க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் உணவை தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்கின்றன.
குறிப்பாக, வெடி மருந்து தொழிற்சாலை குடியிருப்பு வளாகம், உதயம் நகர் கலைமகள் பகுதிகளுக்கு அவ்வப்போது வந்து செல்கிறது.இந்நிலையில், நேற்று முன்தினம், குன்னுார் கலைமகள் தெரு பகுதியில் முகாமிட்ட காட்டெருமை குடியிருப்பு பகுதியில் நீண்ட நேரம் நின்றது. தொடர்ந்து அருகில் குடியிருப்பு பகுதி வளாகத்திற்குள் சென்றதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
மக்கள் கூறுகையில், 'வனத்துறையினர் காட்டெருமைகளை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்,' என்றனர்.

