தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மின்சாரம் பாய்ந்து காட்டெருமை பலி

மின்சாரம் பாய்ந்து காட்டெருமை பலி

மின்சாரம் பாய்ந்து காட்டெருமை பலி


UPDATED : நவ 10, 2026 10:04 PM

ADDED : நவ 10, 2026 09:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 10:04 PM ADDED : நவ 10, 2026 09:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்:

கூடலுார் ஓவேலி அருகே அறுந்து விழுந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து காட்டெருமை உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலுார் ஓவேலி வனச்சரகம் பார்வுட் 'கிளன்வென்ஸ்' தனியார் எஸ்டேட்டில் காட்டெருமை இறந்து கிடப்பதாக, வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. கூடலுார் உதவி வன பாதுகாவலர் சீனிவாசன், ஓவேலி வனச்சரகர் கருப்பு மற்றும் வன ஊழியர்கள் உடலை ஆய்வு செய்தனர்.

விசாரணையில், அறுந்து விழுந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து காட்டெருமை உயிரிழந்தது தெரியவந்தது. அதன் உடலை, முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் பிரேத பரிசோதனை செய்தார்.

வனத்துறையினர் கூறுகையில், 'ஆய்வக பரிசோதனைக்கு உடல் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பின் உயிரிழப்புக்கு வேறு காரணம் இருப்பின் விசாரணை நடத்தப்படும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us