/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் முகாம்
/
தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் முகாம்
ADDED : அக் 13, 2024 09:57 PM

கோத்தகிரி : கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் காட்டெருமை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், நீர் ஆதாரமுள்ள விளை நிலங்களை தவிர்த்து, பெரும்பாலான நிலப்பரப்பில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பொருளாதாரம், தேயிலை விவசாயம் என்பதால், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் இத்தொழிலை நம்பியுள்ளனர்.
கடந்த காலங்களை காட்டிலும், தற்போது, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, இதுவரை இல்லாத வகையில், 30 ரூபாய் வரை விலை கிடைக்கிறது.
தற்போது, மழை பெய்து வருவதால் தோட்டங்களில் மகசூல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தோட்டங்களில் உள்ள களை செடிகளை உட்கொள்ள காட்டெருமைகள் கூட்டமாக தோட்டங்களில் முகாமிடுகின்றன. இதனால், தேயிலை பறிப்பது மற்றும் தோட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, வனத்துறையினர் ஆய்வு செய்து, காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.