ADDED : ஜன 03, 2024 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் : காரமடை நகராட்சி தலைவர் உஷாவிடம், 20வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் விக்னேஷ் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவை மாவட்டம் காரமடை நகராட்சியில், சிறுமுகை ரோடு மேற்கு பகுதியில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் புதிதாக சாக்கடை வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சாக்கடை வடிகால் மிகவும் சேதம் அடைந்துள்ளது. நகராட்சி நிர்வாகம் இதனை ஆய்வு செய்ய வேண்டும்.
நகராட்சிக்கு இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தரமற்ற வகையில் சாக்கடை வடிகால் அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை இல்லாத பட்சத்தில் பா.ஜ.,சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.