/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரியில் பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் குழு கூட்டம்
/
கோத்தகிரியில் பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் குழு கூட்டம்
கோத்தகிரியில் பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் குழு கூட்டம்
கோத்தகிரியில் பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் குழு கூட்டம்
ADDED : ஆக 03, 2025 08:28 PM
கோத்தகிரி; கோத்தகிரியில் பா.ஜ., சார்பில் பூத் வலிமைப்படுத்தும் குழு நிர்வாகிகளுடனான, கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
மாநில செயற்குழு உறுப்பினர் போஜராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில், 'குன்னுார் தொகுதிக்கு உட்பட்ட, 227 பூத்களிலும், 12 பேர் கொண்ட பூத் வலிமைபடுத்தும் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள்,அந்தந்த பூத்களில், மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது குறித்தும், பூத் கமிட்டி சிறப்பாக செயல்படுகிறதா என்பது குறித்தும், நேரில் ஆய்வு செய்வதுடன், வரும் சட்டசபை பொது தேர்தலில் அதிக ஓட்டுக்களை பெற பெற வேண்டும்,' என, உறுதி ஏற்கப்பட்டது.
கூட்டத்தில், ஒ.பி.சி., அணி மாநில பொது செயலாளர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பூத் வலிமைப்படுத்தும் குழுவின் பணிகள் குறித்தும், தேர்தலில் வெற்றி பெறுவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.
இதில், இணை பொறுப்பாளர் நடராஜன், மாவட்ட பொது செயலாளர் குமார், பட்டியல் அணி மாநில செயலாளர் அன்பரசன், நிர்வாகிகள் பாபு அண்ணன் , திலகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.