ADDED : ஏப் 09, 2026 05:36 AM

அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டி நகரில் பா.ஜ., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஊட்டி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் கூட்டணி கட்சியினருடன் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, வேட்பாளர் போஜராஜன், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் வினோத், துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், காந்தள் பகுதியில் ஓட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ்சில் ஏறி பயணிகளிடம் ஓட்டு சேகரித்தனர்.
