ADDED : ஏப் 06, 2026 08:04 PM

ஊட்டி: ஊட்டி தொகுதி பா.ஜ., வேட்பாளர் போஜராஜன் கூட்டணி கட்சியினருக்கு மதியம், 2:30 மணிக்கு வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் டினு அரவிந்திடம் தாக்கல் செய்தார்.
அவர் போஜராஜன் கூறுகையில், ''ஊட்டி தொகுதியில் மக்களுக்கு பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளாமல் உள்ளது. இங்கு, தேயிலை, சுற்றுலா மற்றும் மலை காய்கறி விவசாயத்தை நம்பியுள்ளனர். தொழில் மேம்பட அனைத்து நடவடிக்கைகள் திறம்பட மேற்கொள்ளப்படும். தேயிலை விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். நகரின் முக்கிய பிரச்னையான 'பார்க்கிங்' பிரச்னை; சுற்றுலா பயணிகளுக்கு தரமான குடிநீர் வினியோகம் செய்யவும் முன்னுரிமை அளிக்கப்படும்,'' என்றார்.
தொடர்ந்து, வேட்பாளர் போஜராஜன் கூட்டணி கட்சியினருடன் மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்து, ெஹத்தையம்மன் தேர் பவனி நிகழ்ச்சியில் பங்கேற்று பக்தர்களுடன் நடனமாடி ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.
