ADDED : பிப் 16, 2024 12:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் அருகே காரமடை சாலையில் பா.ஜ., சார்பில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது.
கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சங்கீதா தலைமை வகித்தார். துணைத் தலைவர் விக்னேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சதீஸ், தொகுதி பொறுப்பாளர் நந்தகுமார் மற்றும் பா.ஜ.,வினர் பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பா.ஜ.,வினர் கூறுகையில், நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அலுவலகங்கள் தொகுதி வாரிய பா.ஜ.,சார்பில் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையத்திலும் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடந்து வருகின்றன, என்றார்.-