/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பா.ஜ., பட்டியல் அணி மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
/
பா.ஜ., பட்டியல் அணி மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
பா.ஜ., பட்டியல் அணி மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
பா.ஜ., பட்டியல் அணி மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
ADDED : நவ 22, 2025 05:09 AM

கோத்தகிரி: கோத்தகிரி கக்குச்சி கிராமத்தில், பா.ஜ., பட்டியல் அணி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டலதலைவர்கள் அறிமுககூட்டம் நடந்தது.
பட்டியல் அணி மாவட்ட தலைவர் தங்கம் தலைமை வகித்தார். பா.ஜ., மாவட்ட தலைவர் தருமன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் முருகேசன் மாநில செயற்குழு உறுப்பினர் அன்பு ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், பட்டியல் அணி நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து, 'தேர்தலில் பா.ஜ., கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு, பட்டியலின மக்களின் முழுமையான ஓட்டுகளை சேகரித்து, வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது. அதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன், மாநில பிரசார அணி பிரிவு அமைப்பாளர் சபிதா போஜன், முன்னாள் மாவட்ட தலைவர்கள், மோகன்ராஜ், குமரன் மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாபு மற்றும் குமார் உட்பட பலர் பங்கேற்றனர். பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

