தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பா.ஜ., பட்டியலின அணியினர் ஆர்ப்பாட்டம்

 பா.ஜ., பட்டியலின அணியினர் ஆர்ப்பாட்டம்

 பா.ஜ., பட்டியலின அணியினர் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 19, 2026 07:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 07:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: எஸ்.சி., எஸ்.டி., பிரிவுகளுக்கான தொகையை மகளிர் உரிமை தொகைக்காக மாற்றிய தி.மு.க. அரசை கண்டித்து, மாவட்ட, பா.ஜ., எஸ்.சி., எஸ்.டி., அணி சார்பில், குன்னுார் வி.பி., தெருவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, எஸ்.சி., அணி மாவட்ட தலைவர் தங்கம் தலைமை வகித்தார். பா.ஜ., மாவட்ட தலைவர் தருமன் முன்னிலை வகித்தார்.

எஸ்.சி., அணி மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன் பேசுகையில்,''பட்டியலின, பழங்குடி மக்களுக்கு வாழ்வாதாரம் உயர்த்த, மத்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் வழங்குகிறது.

ஆனால், தி.மு.க., அரசு, தனது ஓட்டு வங்கி, அரசியலுக்காக மத்திய அரசின் நிதியை மடைமாற்றம் செய்கிறது. இதனால், பட்டியலின பழங்குடி மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, வரும் தேர்தலில் தி.மு.க.,விற்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் , என்றார்.

முன்னாள் எம்.எல்.ஏ., சாந்தி ராமு பேசுகையில், ''மத்திய அரசிடம் இருந்து வந்த அந்த நிதியை எடுத்து,'நாங்கள் நல திட்டங்களை செய்தோம்' என கூறும் அவல நிலையிலான ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சியை வேரோடு அழிக்க வேண்டும்,'' என்றார்.

மாவட்ட பொது செயலாளர் சக்திவேல், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் மோகன்ராஜ், துணைதலைவர்கள் ஈஸ்வரன், பாப்பண்ணன் மற்றும் போஜராஜ், அன்பரசன், அ.தி.மு.க.,நகர செயலாளர் சரவணகுமார், அ.ம.மு.க, நகர செயலாளர் சுரேஷ் உட்பட பலர் பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us