/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
/
ஊட்டியில் பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : மே 05, 2025 10:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி; பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து, மாநிலம் முழுவதும் பா.ஐ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதன் ஒரு பகுதியாக, ஊட்டி ஏ.டி.சி., யில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ., மாவட்ட தலைவர் தருமன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார்.
அதில்,'பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம். தமிழகத்தில் எங்கெங்கு பாகிஸ்தானியர்கள் உள்ளனர் என்பதை ஆய்வு செய்து, அவர்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, கலெக்டர் லட்சுமி பவ்யாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.