/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரத்த கொடையாளர் தினம் சாதனையாளர்களுக்கு கேடயம்
/
ரத்த கொடையாளர் தினம் சாதனையாளர்களுக்கு கேடயம்
ADDED : செப் 20, 2024 09:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை; மாநில எஸ்ட்ஸ் கட்டுப்பாடு மையம்; மாநில குருதி பரிமாற்ற குழுமம் ஆகியவை இணைந்து, ரத்த தான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.
அதில், ஆண்டுக்கு அதிக முறை ரத்ததானம் செய்யும் கொடையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.
மருத்துவ கல்லுாரி முதல்வர் கீதாஞ்சலி பங்கேற்று, 40 பேருக்கு கேடயம்; சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். மருத்துவ அலுவலர் ரவிசங்கர், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.