/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் படகு சவாரி; சுற்றுலா பயணிகள் ஆர்வம்
/
ஊட்டியில் படகு சவாரி; சுற்றுலா பயணிகள் ஆர்வம்
ADDED : ஜன 02, 2025 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி, -ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
ஊட்டியில் சீசன் நாட்களை தவிர்த்து, வார விடுமுறை நாட்களிலும் கணிசமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இவர்கள் படகு சவாரி செய்வதை விரும்புகிகின்றனர்.
இந்நிலையில், தொடர் விடுமுறை காரணமாக, கர்நாடகா, கேரளா உட்பட, சமவெளி பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் கடந்த சில நாட்களாக ஊட்டியில் திரண்டனர். குடும்பத்துடன் வந்திருந்த சுற்றுலா பயணிகள், ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்து குதுாகலம் அடைந்தனர். இதனால், படகு இல்லம் சாலையில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.