/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிம்ஸ்பூங்கா ஏரியில் படகு சவாரி; சுற்றுலா பயணிகள் ஆர்வம்
/
சிம்ஸ்பூங்கா ஏரியில் படகு சவாரி; சுற்றுலா பயணிகள் ஆர்வம்
சிம்ஸ்பூங்கா ஏரியில் படகு சவாரி; சுற்றுலா பயணிகள் ஆர்வம்
சிம்ஸ்பூங்கா ஏரியில் படகு சவாரி; சுற்றுலா பயணிகள் ஆர்வம்
ADDED : பிப் 14, 2024 11:42 PM

குன்னுார்: குன்னுார் சிம்ஸ்பூங்காவில், சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்த போதும், ஏரியில் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குன்னுார் சிம்ஸ் பூங்காவில் வரும், ஏப்., மே மாதங்களில் கோடை சீசன் மற்றும், 64-வது பழ கண்காட்சியையொட்டி, 3.14 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.
தற்போது, ஊட்டிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்த போதும், குன்னுாரில் வழக்கத்தை விட குறைவாக உள்ளதாக தோட்டக்கலை துறையினர் தெரிவிக்கின்றனர்.
எனினும், குறைந்தளவில் வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் படகு இல்ல ஏரியில் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். படகுகளில் அமர்ந்தவாறு போட்டோ எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.