/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனத்துறை பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்ட உடல்; யானை வழித்தடங்களில் ஏற்பட்ட தடையால் பாதிப்பு

ADDED : ஆக 05, 2025 10:34 PM

பந்தலுார்; பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில், பகல் நேரங்களிலும் யானைகள் ஊருக்குள் வருவதால், இறந்தவரின் உடல்களை வனத்துறை பாதுகாப்புடன் அடக்கம் செய்யும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார், அரசு தேயிலை தோட்டங்கள், சிறு விவசாய தோட்டங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இதனை ஒட்டி, தமிழக, கேரள வனப்பகுதிகளும் அமைந்துள்ள நிலையில், யானைகளின் வழித்தடங்களும் அதிகம் உள்ளது.
சமீப காலமாக யானைகளின் வழித்தடங்கள் மறைக்கப்பட்டு, கட்டடங்கள் மற்றும் மின் வேலிகள் அமைத்துள்ளதால், யானைகளின் வலசை பாதை மாறி, மக்கள் குடியிருப்பு பகுதிகளை தங்கள் வழித்தடங்களாக மாற்றி வருகின்றன.
இந்நிலையில், சேரங்கோடு பகுதியில் உயிரிழந்த ஒருவரின் உடலை அடக் கம் செய்வதற்காக 'டான்டீ' தேயிலை தோட்ட மயானத்திற்கு எடுத்து சென்றபோது, அங்கு, 6- யானைகள் முகாமிட்டு இருந்தன. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சேரம்பாடி வனத்துறையினர், உடலை அடக்கம் செய்யும் வரை, வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மக்கள் கூறுகையில்,'சமீப காலமாக இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய கூட, வனத்துறை பாதுகாப்பு தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை போக்கும் வகைகளில், யானைகள் ஊருக்குள் வருவதை தவிர்க்க, அதன் வழித்தடத்தில் உள்ள தடைகளை அகற்ற வேண்டும்,' என்றனர்.