/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போலீஸ் விசாரணைக்கு உதவும் 'பாடி ஓன் கேமரா'
/
போலீஸ் விசாரணைக்கு உதவும் 'பாடி ஓன் கேமரா'
ADDED : செப் 02, 2025 08:15 PM

பந்தலுார் ; நீலகிரியில் தற்போது போலீசார் பயன்படுத்தும் 'பாடி ஓன்கேமரா' பல்வேறு விசாரணைக்கு பெரும் உதவியாக அமைத்துள்ளது.
பொதுமக்கள் நடத்தும் போராட்டங்கள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் உள்ளிட்ட போலீஸ் பாதுகாப்பு பணிகளின் போது, அங்கு நடக்கும் சம்பவங்களை கண்காணிக்க போலீசார் கேமரா மேன்களை பயன்படுத்தி வருகின்றனர். சில இடங்களில் வாடகைக்கு கேமரா பயன்படுத்தி நிகழ்வுகளை பதிவு செய்கின்றனர்.
அத்துடன் சோதனை சாவடிகள் மற்றும் விசாரணை குற்றவாளிகளிடம் போலீசார் விசாரணை செய்யும் போது, மொபைல் போன் மற்றும் கேமராக்களை பதிவு செய்து அதனை தங்கள் சாட்சியமாக வைத்து கொள்கின்றனர். இது போன்ற நேரங்களில் சம்பவங்களை முழுமையாக பதிவு செய்வதில், சில நேரங்ரகளில் சிக்கல் ஏற்படுகிறது.
இந்நிலையில், சமீபகாலமாக போலீசாருக்கு, 'பாடி ஓன் கேமரா' வழங்கப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்படுகிறது. போலீஸ் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில், சிறிய வகை கேமராவை , சீருடையில் பொருத்தி கொள்ளலாம்.
இந்த கேமராக்களில், '4-ஜி, 5 ஜி இன்டர்நெட்' இணைப்புடன், போட்டோ மற்றும் வீடியோக்களை மாற்றம் செய்து கொள்ளவும் முடியும். இந்த வகை கேமராக்கள், மாவட்டத்தில், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வழங்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய நிகழ்வுகளுக்கு போலீசார், இந்த கேமராக்களை பொருத்தி வருவதால் பல்வறு விசாரணைகளுக்கு துல்லியமான பதிவுகள் கிடைத்து வருவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.