/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல் ;வழக்கம் போல் சோதனை பணி: குழப்பத்தில் போலீசார்

ADDED : அக் 15, 2024 09:57 PM

ஊட்டி : ஊட்டியில் பிரபல தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
ஊட்டியில் உள்ள முத்தோரை பாலாடாவில் உள்ள குட்செபெர்டு பள்ளிக்கு இ----மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பள்ளி நிர்வாகத்தினர் இது குறித்து எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
எஸ்.பி., நிஷா உத்தரவின் பேரில் போலீசார், மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் அந்த தனியார் பள்ளியில் சென்று தீவிர சோதனை செய்தனர். பள்ளி வளாகம் முழுவதும் ஆய்வு செய்து வாகனங்களையும் சோதனை செய்து, விசாரணை நடத்தினர்.
அதில், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த பள்ளிக்கு கடந்த சில நாட்களுக்கு முன், ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் கடந்த சில நாட்களாக பள்ளிகள்; ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஏ.டி.எஸ்.பி., சவுந்தரராஜன் தலைமையில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.