/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேத்தி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்; மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு
/
கேத்தி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்; மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு
கேத்தி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்; மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு
கேத்தி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்; மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு
ADDED : டிச 04, 2024 09:54 PM

குன்னுார்; குன்னுார் கேத்தி 'லைட்லா' பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டலால், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்தனர்.
குன்னுார் கேத்தி அருகே ஜார்ஜ் ஹோம் சொசைட்டி, லைட்லா பள்ளியில் நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு 'மெயிலில்' வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதாக, பள்ளி நிர்வாகத்தினர் நீலகிரி எஸ்.பி.,க்கு புகார் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில், ஊட்டி வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைகள் மேற்கொண்டனர். எனினும், எதுவும் கிடைக்கவில்லை.
ஏற்கனவே, ஊட்டியில், '7 ஓட்டல்கள், ஹில்டாஸ் பள்ளி, லாரன்ஸ் பள்ளி, குன்னுார் ஸ்டேன்ஸ் பள்ளிக்கு இரு முறை,' என, இதே போன்று வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்டன.
இந்நிலையில், நேற்று முன்தினம், ஊட்டி மருத்துவ கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து நேற்று லைட்லா பள்ளிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் பதட்டத்தை உருவாக்கி வருகிறது.