/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பிரபல ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
பிரபல ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஜன 23, 2025 11:07 PM

ஊட்டி; ஊட்டியில் பிரபல தனியார் ஓட்டலுக்கு இ--மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
ஊட்டியில் பிரபல ஓட்டல்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவ கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
நேற்று முன்தினம் மீண்டும் ஊட்டியில் உள்ள பிரபல தனியார் ஓட்டலான மோனார்க் ஓட்டலுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
ஓட்டல் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ஓட்டலில் சோதனை செய்து வெடிகுண்டு இல்லை என்று உறுதிப்படுத்தினர். ஏற்கனவே இந்த ஓட்டலுக்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
போலீசார் கூறுகையில், 'இ-மெயில் மூலம் மிரட்டல்கள் எடுப்பதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் உள்ளது. இருந்தாலும் இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,' என்றனர்.

