ADDED : டிச 16, 2024 02:25 AM

ஊட்டி: நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பிரபல ஹோட்டல்களான, 'ஜெம்பார்க், மோனார்க், சன்கிளாஸ்' ஆகியவற்றுக்கு நேற்று மீண்டும் இ -- மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதுகுறித்து, நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வெடிகுண்டு நிபுணர்கள், சோதனை செய்து, வெடிகுண்டு இல்லை என, உறுதிப்படுத்தினர். போலீசார் சோதனைக்கு சென்றதால், அங்கிருந்த சுற்றுலா பயணியர் புரளி என அறிந்தவுடன் நிம்மதி அடைந்தனர்.
ஏ.டி.எஸ்.பி., சவுந்தரராஜன் கூறுகையில், ''வழக்கமாக இ- - மெயில் அனுப்பினால், மெயில் வரும் முகவரியை எளிதாக கண்டறியலாம். ஆனால், வி.பி.என் நெட்வொர்க்கில் ஐ.பி., முகவரியை மாற்றி காட்டுகின்றனர்.
''ஒவ்வொரு முறையும் ஆய்வு செய்யும் போது, வேறு நாடுகளை காட்டுவதால் குழப்பம் ஏற்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்,'' என்றார்.
