/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இதுவரை இல்லாத அளவில் தேயிலை ஏலத்தில் ஏற்றம்; ரூ.32 கோடி மொத்த வருமானம்
/
இதுவரை இல்லாத அளவில் தேயிலை ஏலத்தில் ஏற்றம்; ரூ.32 கோடி மொத்த வருமானம்
இதுவரை இல்லாத அளவில் தேயிலை ஏலத்தில் ஏற்றம்; ரூ.32 கோடி மொத்த வருமானம்
இதுவரை இல்லாத அளவில் தேயிலை ஏலத்தில் ஏற்றம்; ரூ.32 கோடி மொத்த வருமானம்
ADDED : அக் 01, 2024 10:51 PM
குன்னுார் : குன்னுார் தேயிலை ஏலத்தில், இதுவரை இல்லாத அளவு, 32.69 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது மகிழ்ச்சியை அளித்துள்ளது.
குன்னுார் ஏல மையத்தில், 39வது ஏலம் நடந்தது. அதில், '18.06 லட்சம் இலை ரகம்; 4.41 லட்சம் டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 22.47 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது. 20.86 லட்சம் கிலோ விற்றது. மொத்த வருமானம், 32.69 கோடி ரூபாய் கிடைத்தது.
சராசரி விலை கிலோவுக்கு, 156.64 ரூபாய் என இருந்தது. வரத்து மற்றும் விற்பனை அதிகரித்ததுடன், கிலோவுக்கு, 10 ரூபாய் சராசரி விலை உயர்ந்தது; மொத்த வருமானமும், 7.26 கோடி ரூபாய் ஒரே வாரத்தில் அதிகரித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த, 6 வாரங்களை ஒப்பிடுகையில் சராசரி விலை, 55 ரூபாய் வரை உயர்ந்தது, பசுந்தேயிலை விலை நிர்ணய ஏற்றத்திற்கு காரணமாக உள்ளது. கடந்த ஆண்டு பாரத் ஏல முறைக்கு மாற்றப்பட்டதால், 39 வது ஏலம் ரத்து செய்யப்பட்டது.
கடந்த, 2022ம் ஆண்டு நடந்த, 39வது ஏலத்தில் வரத்து, 19.85 லட்சம் இருந்த நிலையில், 14.85 லட்சம் கிலோ விற்பனையாகி, 15.09 கோடி ரூபாய் வருமானம் இருந்தது.
உச்சம் தொடும் தென் மாநிலம்
குன்னுார் ஏல மையத்தில் ஏற்றம் கண்டது போல 'டீசர்வ்' மற்றும் கோவை, கொச்சி ஏல மையங்களில், 39 வது ஏலம் இது வரை இல்லாத அளவு ஏறுமுகமாக உள்ளது.
டீசர்வ் ஏலத்துக்கு வந்த, 1.41 லட்சம் கிலோ 100 சதவீதம் விற்றது. கோவையில், 4.84 லட்சம் கிலோ வந்ததில், 98 சதவீதம்; கொச்சியில், 10.49 லட்சம் கிலோ வந்ததில்,93.10 சதவீதம் விற்றது.
சராசரி விலையில் கிலோவிற்கு, கொச்சியில், 174.17 ரூபாய், கோவையில், 158.31 ரூபாய், டீசர்வில், 142 ரூபாய் என இருந்தது. தென் மாநில தேயிலை துாளுக்கு தொடர்ந்து கிராக்கி அதிகரித்து வருவதால் சராசரி விலையும் உயர்ந்து வருகிறது. இதனால், விவசாயிகள் தொழிற்சாலைகளுக்கு வழங்கும் பசுந்தேயிலையின் மாதாந்திர விலை நிர்ணயமும் உயர்ந்து வருகிறது. இதனால், சிறு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.