sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காலை உணவு திட்டம் ஆய்வு; மாணவர்களிடம் கருத்து கேட்பு

காலை உணவு திட்டம் ஆய்வு; மாணவர்களிடம் கருத்து கேட்பு

காலை உணவு திட்டம் ஆய்வு; மாணவர்களிடம் கருத்து கேட்பு


ADDED : டிச 25, 2024 07:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 25, 2024 07:59 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி; கோத்தகிரி ஒரசோலை அரசு நடுநிலைப் பள்ளியில், காலை உணவு திட்டம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாநில அரசு, காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி, பள்ளி மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன்படி, கோத்தகிரி வட்டார வளமைய பயிற்றுனர் செந்தில்குமார், ஒரசோலை அரசு நடுநிலை பள்ளிக்கு சென்று, உணவு தரத்தை ஆய்வு செய்தார். மேலும் உணவை உண்டு சோதித்து, மாணவர்களிடம் தரம் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உட்கூறுகளில், எண்ணும் எழுத்தும் மற்றும் முன் பருவக்கல்வி ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில், கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணி, துாய்மை பணியாளர், 10 மாத நிலுவை தொகையினை, பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் முன்னிலையில், துாய்மை பணியாளர் தமிழ் செல்வியிடம் வழங்கினார். அதில், ஆசிரியைகள் கமலா, நளினி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us