தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மார்பக புற்றுநோய் பாதிப்புகள் கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மார்பக புற்றுநோய் பாதிப்புகள் கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மார்பக புற்றுநோய் பாதிப்புகள் கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


UPDATED : அக் 13, 2026 05:20 PM

ADDED : அக் 13, 2026 05:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 05:20 PM ADDED : அக் 13, 2026 05:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி:

கோத்தகிரி தெங்குமரஹாடா கிராமத்தில், பெண்களுக்கான மார்பக புற்றுநோய் குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ஊட்டி ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரி வேதியியல் துறை இணை பேராசிரியர் காளிராஜன் வரவேற்றார்.

மருந்தியல் கல்லுாரியில் மருந்தியல் வேதியல் துறை மற்றும் மக்களுக்கான அறக்கட்டளை சார்பில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் ஆதரவுடன், 'பிங்க் ஹோப்' பழங்குடியின பெண்களுக்கு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் ஆரம்ப நிலை கண்டறிதல் முகாம், இரு நாட்கள் நடந்தது.

கல்லுாரி முதல்வர் தனபால் தலைமை வகித்து பேசுகையில், ‘‘தொலைதுார மலை கிராமங்களில் வசிக்கும் பணிபுரியும் பெண்களுக்கு இடையே, நோய் தடுப்பு மருத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். மார்பக புற்றுநோயை, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து போதிய சிகிச்சை பெறுவது முக்கியம்,’’ என்றார்.

ஊட்டி அரசு கலைக்கல்லுாரி வரலாற்று துறை இணை பேராசியர் கனகம்பாள், ஊட்டி அகில இந்திய வானொலி அறிவிப்பாளர் சரவணன், பல் மருத்துவர் அனுஷா சந்தேசாய் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில், பழங்குடியின மக்களுக்கு, பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, உதவி பேராசிரியர் கோமதி சுவாமிநாதன், அறக்கட்டளை நிறுவனர் வெங்கடேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us