/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தெப்பக்காடு -மசினகுடி சாலையில் பாலம் திறப்பு வனத்துறைக்கு சொந்தமான சாலை மூடல்
/
தெப்பக்காடு -மசினகுடி சாலையில் பாலம் திறப்பு வனத்துறைக்கு சொந்தமான சாலை மூடல்
தெப்பக்காடு -மசினகுடி சாலையில் பாலம் திறப்பு வனத்துறைக்கு சொந்தமான சாலை மூடல்
தெப்பக்காடு -மசினகுடி சாலையில் பாலம் திறப்பு வனத்துறைக்கு சொந்தமான சாலை மூடல்
ADDED : ஏப் 27, 2025 09:29 PM

கூடலுார் : மசினகுடி -தெப்பக்காடு சாலையில், புதிய பாலம் வழியாக வாகன போக்குவரத்து துவங்கப்பட்டதை தொடர்ந்து, மூன்று ஆண்டு களாக வாகன போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்த வனத்துறை சாலை மூடப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு - மசினகுடி சாலையில் மாயாறு ஆற்றின் குறுக்கே, சேதமடைந்த பழைய பாலத்துக்கு மாற்றாக புதிய பாலம் கட்டும் பணி, 2022 ஜன., மாதம் துவங்கப்பட்டது.
தெப்பக்காடு, மசினகுடி இடையே தற்காலிகமாக வனத்துறைக்கு சொந்தமான சாலையை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்தது. பருவமழையின் போது, தற்காலிக சாலையில் உள்ள தரைப்பாலம் அடிக்கடி மழை வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதிருப்தி அடைந்த மக்கள், புதிய பாலம் கட்டும்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினர்.
மூன்று ஆண்டுகளாக, நடந்து வந்த புதிய பாலம் கட்டும் பணி முடிக்கப்பட்டு, சமீபத்தில் போக்குவரத்து துவங்கப்பட்டது. ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
புதிய பாலத்தில் வாகன போக்குவரத்து துவங்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்த, வனத்துறைக்கு சொந்தமான சாலை மூடப்பட்டது. வனத்துறையினர் கூறுகையில், ' மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த பாலம் பணி நிறைவு பெற்று திறக்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், வனத்துறைக்கு சொந்தமான இச்சாலையில், வாகன போக்குவரத்துக்கு அனுமதி இல்லை,' என்றனர்.

