/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உடைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள்; குடிக்க தண்ணீர் இல்லாமல் அவதி
/
உடைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள்; குடிக்க தண்ணீர் இல்லாமல் அவதி
உடைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள்; குடிக்க தண்ணீர் இல்லாமல் அவதி
உடைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள்; குடிக்க தண்ணீர் இல்லாமல் அவதி
ADDED : செப் 16, 2025 09:45 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே போத்துக்கொல்லி பகுதியில், சாலை சீரமைப்பு பணிக்காக குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டதால், தண்ணீர் இல்லாமல் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.
பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, போத்து கொல்லி- - சப்பந்தோடு சாலையில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், சாலை ஓரம் போடப்பட்ட கூட்டு குடிநீர் குழாய்கள் உடைக் கப்பட்டு உள்ளது. மொத்தமாக குழாய்கள் அனைத்தும் உடைக்கப்பட்டதால், இந்த பகுதி மக்கள் கடந்த பல வாரங்களாக, குடிநீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால், பழங்குடியினர் உள்ளிட்ட மக்கள், அருகில் உள்ள தனி நபர்கள் கிணறுகளை நாடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, புதிய குடிநீர் குழாய்களை பொருத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை வேண்டும்.