/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'அனைத்து தரப்பினரும் பயன் பெறும் பட்ஜெட்' :பொது மக்கள் கருத்து
/
'அனைத்து தரப்பினரும் பயன் பெறும் பட்ஜெட்' :பொது மக்கள் கருத்து
'அனைத்து தரப்பினரும் பயன் பெறும் பட்ஜெட்' :பொது மக்கள் கருத்து
'அனைத்து தரப்பினரும் பயன் பெறும் பட்ஜெட்' :பொது மக்கள் கருத்து
ADDED : பிப் 01, 2024 10:20 PM

நிருபர் குழு
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், 'இது அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் உள்ளது' என்று கூறினர்.
கண்ணம்மாள், தனியார் நிறுவன ஊழியர், அன்னுார்.
அடுத்த ஐந்தாண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டித் தரப்படும். மாடியில் சோலார் அமைத்தால் மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம். ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்ய புதிய செயலி அறிமுகம், ஆகிய அறிவிப்புகள் இடைக்கால பட்ஜெட்டில் மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. கர்ப்பப்பை கேன்சரை தடுக்க ஒன்பது முதல் 14 வயதுள்ள பெண்களுக்கான தடுப்பூசி திட்டமும் வரவேற்புக்குரியது.
பொன்னுச்சாமி, பெட்டிக்கடை உரிமையாளர், அன்னுார்.
மீன்வளத்துறையில், 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்கிற அறிவிப்பு தமிழகத்திற்கு மிகுந்த பயன் தரும். அங்கன்வாடி பணியாளர்களுக்கும் காப்பீடு திட்டத்தை விரிவாக்குவது. 41 ஆயிரம் ரயில் பெட்டிகளை வந்தே பாரத் ரயில் தரத்திற்கு உயர்த்துவது, மெட்ரோ ரயில் திட்டத்தை மேலும் பல நகரங்களுக்கு விரிவாக்குவது, ஆன்மீக சுற்றுலாவுக்கு புதிய திட்டங்கள் இவையெல்லாம் மத்திய அரசின் அற்புதமான அறிவிப்புகள்.
சரசு, இல்லத்தரசி, பெரியநாயக்கன்பாளையம்.
பெண்களுக்காக கர்ப்பப்பை வாய் புற்றுநோயை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதில், 9 முதல், 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இவ்வகையான தடுப்பூசி செலுத்துவதால், எதிர்காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்று நோயை தடுக்க முடியும். மேலும், நாட்டில் அதிகமான மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனிமனித பெண்ணின் பொருளாதாரம் மேம்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.
சோமசுந்தரம், பூஜை பொருட்கள் விற்பனையாளர், மேட்டுப்பாளையம்.
மத்திய பட்ஜெட்டில் வருமான வரியில் மாற்றம் இல்லை. இது நடுத்தர மக்கள் வரவேற்பை பெற்று உள்ளது. 4௧ ஆயிரம் ரயில் பெட்டிகள் தரம் உயர்த்துவதால், பயணிகள் சொகுசாக பயணம் செய்ய முடியும். நடுத்தர வருவாய் பிரிவு மக்களுக்கு, புதிய வீட்டு வசதி திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். சிறுமிகளுக்கு கருப்பை புற்றுநோய் தடுப்பூசி திட்டம், மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்.
ரவிக்குமார், ஒப்பந்ததாரர், மேட்டுப்பாளையம்.
மத்திய அரசின் பட்ஜெட்டில், தொழில் துவங்க வட்டி இல்லா கடன் என அறிவிப்பால், இளைஞர்கள் அதிகம் தொழில் துவங்க வாய்ப்பு உள்ளது. சோலார் பேனல் அமைத்தால், 300 யூனிட் மின்சாரம் ரத்து மிகவும் வரவேற்கத்தக்கது. ஆன்மீகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது, இந்துக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. 2027ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு, இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும்.
குமாரசாமி, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர், சோமனுார்.
வீடுகளின் மாடியில், சோலார் அமைத்தால், 300 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கிறோம். அதேபோல், விசைத்தறி கூடங்களுக்கு சோலார் மின் உற்பத்திக்கு ஏதாவது சலுகைகள் அறிவித்திருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும். மொத்தத்தில் வரவேற்க கூடிய பட்ஜெட்டாக உள்ளது.
ரவிக்குமார், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க செயலாளர், சூலுார்.
தொழில் நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது. வருமான வரி விதிக்கும் முறையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை அறிவித்துள்ளதும், கூடுதலாக செலுத்திய வரியை திரும்ப பெறுவதற்கான கால அளவு குறைக்கப்பட்டுள்ளதும் வரவேற்க தக்கது. அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் பட்ஜெட் உள்ளது.
சிவகுமார், வியாபாரம், பெரியநாயக்கன்பாளையம்.
நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்படும். லட்சத்தீவில் சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த, வலுவான நடவடிக்கை. மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க தொடர்ந்து நடவடிக்கை. மகளிர் சுய உதவி குழுக்கள் வாயிலாக மூன்று கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக்கப்படுவர். தொழில் தொடங்க அவர்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும். ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்ய புதிய செயலி அறிமுகம். அங்கன்வாடி பணியாளர்களுக்கு காப்பீடு அறிமுகம் உள்ளிட்டவைகளை சிறந்த அம்சங்கள் எனலாம்.

