/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கட்டட அனுமதி விண்ணப்பம் 'வாட்ஸ் அப்'பில் தகவல் பெறலாம்
/
கட்டட அனுமதி விண்ணப்பம் 'வாட்ஸ் அப்'பில் தகவல் பெறலாம்
கட்டட அனுமதி விண்ணப்பம் 'வாட்ஸ் அப்'பில் தகவல் பெறலாம்
கட்டட அனுமதி விண்ணப்பம் 'வாட்ஸ் அப்'பில் தகவல் பெறலாம்
ADDED : ஆக 07, 2025 07:42 PM
ஊட்டி:
'கட்டட அனுமதிக்கான விண்ணப்பதாரரின் நிலையை அறிந்து கொள்ள 'வாட்ஸ் அப்' வாயிலாக தகவல் தரலாம்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை:
நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டடங்கள் கட்ட அனுமதி கோரும் பொதுமக்கள் www.onlineppath.gov.in என்ற இணையதளம் வாயிலாக, 'சிங்கிள் விண்டோ' போர்டலில் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக ஏற்படும் சந்தேகம், விவரங்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள, 9442772701 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு அல்லது இதே எண்ணிற்கு 'வாட்ஸ் அப்' வாயிலாகவும் விவரம் அனுப்பி தங்களது விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.